Showing posts with label குழப்பத்துடன்..... Show all posts
Showing posts with label குழப்பத்துடன்..... Show all posts

Thursday, November 5, 2009

இளமையில் முதுமை ... !!

சிறு வயதில் பிடிக்காததெல்லாம் இப்போது பிடிக்கிறது !
சிறு வயதில் பிடித்ததெல்லாம் இப்போது பிடிக்கவில்லை!

வாகனங்களை பொம்மைகளாக ஓட்டிய போதிருந்த மகிழ்ச்சி
வேலைக்காக தினமும் நகரில் ஒட்டும் போது இல்லை.

தேர்வுக்காக திருக்குறளை படிக்கும் போதிருந்த வெறுப்பு
இன்று வலையில் தேடி தேடி படிக்கும் போது வியப்பு.

இது போல மாற்றங்கள் என்னுள் ஏராளம்!!
எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கு இதுவும் ஆதாரம்!!