Showing posts with label விலை வாசி. Show all posts
Showing posts with label விலை வாசி. Show all posts

Friday, January 8, 2010

உணவுக் கொள்ளை !!

பல வருடங்களாய் சென்று வந்த மெஸ்சுக்கு நீண்ட நாள் கழித்து சமீபத்தில் சென்று (அதிர்ந்து) வந்தேன். மெஸ் தேடி செல்வதே குறைந்த விலையில் நிறைந்த உணவை சுவையுடன் மதிய சாப்பாடு சாப்பிட தான்.

ஹோட்டல் சாப்பாடு தரும் பிரச்சனைகள் இதில் இல்லை. செலவும் குறைவு . அதுவும் நான் மேற்கூரிய மெஸ்சில் உணவு கல்யாண சாப்பாடு போல இருக்கும். பொரியல் , கூட்டு, பொடி, சாம்பார்,மோர் குழம்பு, கார குழம்பு, ரசம், தயிர், மோர், அப்பளம், ஊறுகாய்.. அத்தனையும் சுவையாய் குறைந்த விலையில்.

அன்றும் பல கனவுகளுடன் உள்ளே நுழைந்தவுடனே unlimited meals இல்லை என்று கேள்வி பட்டபோது பேரதிர்ச்சி.மனதை தேற்றி கொண்டு சாப்பிட ஆரம்பித்தால் , கூட்டு பொரியலுக்கு தனியாக பணம் தர வேண்டும் என்றபோது அவதார் படம் பார்ப்பது போலிருந்தது.

லிமிடெட் மீல்ஸ் தெரியும். லிமிடெட் பொரியல் புதிதாய் இருந்தது.விலை வாசி உயர்வு சரி தான். அதற்காக பொரியலுக்கு கூட தனியாக பணம் கேட்பது மிக கொடுமை.

வழக்கம் போல் சாப்பிட முடியாமல் , எங்கே சாம்பார், மோருக்கெல்லாம் extra பணம் கேட்க போகிறார்களோ ? என்று மனதுக்குள் (வடிவேல் போல) புலம்பி கொண்டே அரை வயிற்றுடன் அரை மனதுடன் வெளியே வரும் போது ஒரு முடிவெடுத்தேன். இனி இந்த மெஸ்சுக்கு வரக்கூடாதென்று.. (கூடவே கடை பெயரையும் ஒரு படம் பிடித்து கொண்டேன் )