Showing posts with label ஈர்ப்பு. Show all posts
Showing posts with label ஈர்ப்பு. Show all posts

Monday, August 3, 2009

ரயிலில் ஒரு வானவில்

கடந்த வாரத்தின் கடைசி நாள்
பகல் பொழுதில் பல்லவனில் பயணித்தேன்.
ஏறிய சில நொடிகளிலே நடந்தேறியது
சுற்று சூழல் ஆராய்ச்சி.

பயணச்சீட்டு பரிசோதனையும் ,
சகபயணிகளின் இடப்பெயற்சியும்,
வியாபாரிகளின் விற்பனையும்,
இனிதே அரங்கேறிக்கொண்டிறந்தது.

வழக்கம் போல் வார பத்திரிக்கை வாசிப்பை
விமர்சையாய் துவங்கி இருந்தேன்.
வெப்பம் குறைய தொடங்கி
விழாக்கோலம் கொண்டிருந்தது வான் மேகங்கள் .

ரயிலோசையிலும் ஒரு குயிலோசை கேட்டு
பார்வையை பவ்யமாய் திசை திருப்பினேன் .
சற்றும் எதிர்பார்க்காத ஒரு அழகிய ஷனத்தில்
சலனமாய் மலர்ந்தது அந்த விழி ஈர்ப்பு பரிமாற்றம்.

எப்போது வந்தாள் அந்த அழகு தேவதை ?
இது போல இதயத்தில் இருகோடி கேள்விகள்.
அத்தனை அழகை நான் பார்த்ததே இல்லை.
அத்தனை அழகாகவும் என்னை யாரும் பார்த்ததே இல்லை.

சில்லென்ற மாலை வேலையில்,
சிறு சாரல் மழையில்,
பூப்போல மலர்ந்த வானவில்லை ,
பார்த்து ரசிக்கக்கூட தோன்றவில்லை.

பார்வைகளும் புன்னகைகளும் பரிமாறப்பட,
நேரமும் ரயிலும் நிற்காமல் ஓட,
நாங்கள் இறங்கும் நிலையமும் வந்தது.
பிரியும் நேரம் வானவில்லும் மறைந்தது.