Tuesday, February 16, 2010

நடைமேம்பால பயணிகள் மின்தூக்கி

இந்த வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தையை தெரிந்தவர்கள் கூறலாம். இந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாதவர்கள் படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
நுங்கம்பாக்கம் சாலையை கடக்க பாதசாரிகள் பயன்படுத்த வேண்டிய மேம்பாலத்தை (Bridge) மிக எளிதாக ஏறி கடக்க இருபக்கமும் அமைக்கப்பட்ட மின்தூக்கி (Lift) தான் இது.
முந்தய ஆட்சிகளில் அமைக்கப்பட்ட நடை மேம்பாலத்தை யாரும் பயன் படுத்தாதால்இரு பக்கமும் மின் தூக்கிகள் அமைத்து இப்பொழுது கடக்க வழி செய்கிறார்கள்.
இந்த இரு பக்கங்கள் கதவு கொண்ட இரு மின் தூக்கிகள் என்னுள் பல கேள்விகளை தூண்டுகிறது. ஆனால் எல்லா கேள்விகளக்கும் பதில் அதனுள்ளேயே இருக்கிறது.

மாநகராட்சி செய்யும் சிங்காரங்களில் இதுவும் ஒன்று.........